RTI வரலாறு

இலங்கையில் தகவலுக்கான சுதந்திரம் பற்றிய சட்டமொன்றைக் கொண்டுவருதல் தொடர்பான வரலாற்றுப் பின்னணி

இலங்கை சார்க் வலயத்தில் தகவலுக்கான உரிமை பற்றிய சட்டமொன்றைக் கொண்டிராத ஒரே நாடாக இருப்பினும், இலங்கையில் இவ்வாறான சட்டமொன்றைக் கொண்டுவர வேண்டியதன் தேவைப்பாடு பற்றிய உரையாடல்கள் 1994 ஆம் ஆண்டு வரை நீண்டு செல்வதைக் காணலாம். குறிப்பாக 1994 பொதுத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியை ஆதரி்த்த ஊடக அமைப்புக்களும் சிவில் அமைப்புக்களும் தேர்தல் களத்தில் அதுபற்றிப் பேசியிருந்தன. 1994 ஆம் ஆண்டில் தகவல், சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயக்கவினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் ஊடாகக் கொள்கை என்னும் விஞ்ஞாபனம் இது பற்றிய எழுத்திலான முதலாவது ஆவணமாகும். ஆகவே, இலங்கையில் 1994 இல் ஆரம்பமான தகவலுக்கான உரிமை பற்றிய சட்டம் தொடர்பான கலந்துரையாடல்களின் தொடர்ச்சியை இக்குறிப்பு தாங்கி வருகின்றது.

தகவலுக்கான உரிமை பற்றிய அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகள்

2015 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்தின் மூலம் 1978 அரசியலமைப்பில் இருப்பினும், ஶ்ரீவெளியிடுதலுட்பட்ட பேச்சுச் சுதந்திரமும் கருத்துத் தெரிவித்தற் சுதந்திரமும் அடிப்படை உரிமையாக அத்தாட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தகவலுக்கான உரிமையை அடிப்படை உரிமையாக அரசியலமைப்பில் உள்வாங்க வேண்டுமென 1994 ஆம் ஆண்டில் முதல் முறையாக கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டது. 1994 ஒக்ரோபர் 10 ஆம் திகதி தகவல், சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயக்கவினால் அமைச்சரவை நிருபம் ஒன்றின் மூலம் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் ஊடாகக் கொள்கை பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் இரண்டாவது வி்டயமாக தகவலுக்கான உரிமையை பரந்தளவில் அங்கீகரிப்பதாகவும் அதற்கென அரசியலமைப்பு ரீதியான அந்தஸ்தினை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் வெகுசன ஊடக அமைச்சினால் ஊடக சுதந்திரத்திலும் வெளியிடுதலுக்குட்பட்ட பேச்சு சுதந்திரத்திலும் வெளியிடுதலுக்குட்பட்ட பேச்சுச் சுதந்திரத்திலும் தாக்கம் செலுத்துகின்ற சட்டங்ளை மறுசீரமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குமுகமாக நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு ஆர். கே. டப்ளியூ. குணசேகர குழு 1996 மே 27 ஆம் திகதி தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்தது. நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் சிவில், அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கையில் சொல்லப்பட்டுள்ளவாறு கருத்து தெரிவித்தற் சுதந்திரத்தில் தகவலுக்கான உரிமையும் உள்ளடக்கப்படுதல் வேண்டும்” பரிந்துரை இல. 03.

எவ்வாறாயினும், அதற்கான அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படாத ஒரு சூழ்நிலைமையில் வெளியிடுதலுட்பட்ட பேச்சு சுதந்திரத்தில் தகவலுக்கான உரிமையும் அடங்குவதாக விமல் பெர்னாந்து எதிர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் ஏனையோரும் [S.C. APPLICATION No. 81/95] வழக்கில் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் எதிர் நகர அபிவிருத்தி அதிகாரசபையும் ஏனையோரும் எனப்படும் (SCFR 47/2004) வழக்கிலும் உயர் நீதிமன்றம் மீண்டும் இந்த நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

1998 ஏப்பிரல் மாதம் 27 தொடக்கம் 29 திகதி வரை பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஊடகச் சுதந்திரமும் சமூகத்தின் பொறுப்பும் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஊடகச் சுதந்திரமும் சமூகத்தின் பொறுப்பும் தொடர்பான கொழும்புப் பிரகடனம்” மூலமும் அரசியலமைப்பில் தகவலுக்கான உரிமை பற்றிய ஏற்பாடுகள் இடம்பெறாமை வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) யின் 19வது பிரிவுக்கமைய அரசியலமைப்பு மீதான திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றைக் கொண்டுவரும் நோக்கத்துடனான அரசியல் யாப்பினை மறுசீரமைக்கும் பணிகள் அக்காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருந்ததோடு, தீர்வுப்பொதி” என்ற பெயரில் பிரசித்தமான அரசியல் யோசனைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 2000 ஆண்டின் அரசியலமைப்பு வரைவில் அடிப்படை உரிமைகளின் கீழ் தகவலுக்கான உரிமை உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்த வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோதும் எதிர்க்கட்சி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த காரணத்தினால் அது விவாதிக்கப்படாமலேயே கைவிடப்பட்டுள்ளது.

Search