தகவலறிதல் உரிமை பற்றிய சர்வதேச தினம்

International RTI Day 2018

இலங்கையானது உலகம் பூராவிலும் தகவலறிதல் உரிமையை உறுதிசெய்த நாடுகள் மத்தியில் சேர்ந்துள்ளமை நாட்டின் சனநாயகத்தையும் நல்லாட்சியையும் மேலோங்கச் செய்விக்கின்ற குறிகாட்டியாக அமைவதோடு அது இலங்கை பிரசைகள் பெற்ற வெற்றியாகவும் அமைகின்றது. 2016 ஓகத்து 04 ஆந் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த சட்டம் இன்றளவில் உலகின் மிகச்சிறந்த மூன்றாவது சட்டமாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

தகவலறிதல் சட்டத்தை அமுலாக்கும் அடிப்படை பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு தனது செயற்பொறுப்பினை சிறப்பாக ஈடேற்றி சட்டத்தை முனைப்பாக வலுப்படுத்த அளப்பரிய பணியை ஆற்றியுள்ளது.

அதேவேளையில் சட்டத்திற்கு கட்டுப்படுகின்ற பொது அதிகாரசபைகளின் கட்டமைப்பினை வகுத்தல், ஒழுங்குவிதிகளை வர்த்தமானியில் பிரசுரித்தல், தீவடங்கிலும் பொது அதிகாரசபைகளை பிரதிநிதித்துவப்படுத்தத்தக்கதாக தகவல் உத்தியோகத்தர்களை நியமித்தல், அவர்களுக்கு பயிற்சியளித்தலும் பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவித்தலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகளையும் பிரச்சார நிகழ்ச்சிகளையும் நடத்துதலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த சட்டத்தினல் எதிர்பார்க்கப்படுகின்ற நோக்கங்களை அடைய பிரசைகள் தமது அந்தரங்கத்தன்மையை விஞ்சி சென்று பொது நன்மையுடன் தொடர்புடைய தகவல்களை கோருதல் மீது நாட்டஞ் செலுத்துதல் வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன்பொருட்டு “பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வருடம்” என்பதை தொனிப்பொருளாகக்கொண்டு 2018 ஆம் ஆண்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் அமுலாக்கப்பட்டு வருவதோடு செத்தெம்பர் 28 இல் கொண்டாடப்படுகின்ற தகவலறிதலுக்கான உரிமை பற்றிய சர்வதேச தினத்துடன் சமாந்திரமாக பின்வரும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  1. 2018 செத்தெம்பர் 21 தொடக்கம் 28 வரையான காலப்பகுதியை " தகவலறிதல் வாரம் " என் பிரகடனஞ் செய்தல்,
  2. அவ்வாரத்தில் இந்த சட்டத்தை சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவுறத்தல்களை வழங்குவதற்கான சுற்றிக்கையொன்றினை வெளியிடுதல்,
  3. இதற்கு சமாந்திரமாக தீவடங்கிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் உள்ளடக்கத்தக்கதாக கல்வி அமைச்சுடன் ஒருங்கிணைந்து பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடாத்துதல்,
  4. பல்கலைக்கழகங்களில் இந்த சட்டம் சார்ந்ததாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆராய்ச்சிகளின் பொழிப்பினை வரவழைத்து பிரகடனஞ் செய்தலும் 2018 செத்தெம்பர் 28 ஆந் திகதி நெலும் பொக்குன நாடக அரங்கில் சர்வதேச மாநாட்டினை நடாத்துதலும்
  5. தகவல் வாரத்துடன் சமாந்திரமாக " ஊருக்கு தகவல் உரிமை" எனும் கருப்பொருளில் RTI நடமாடும் சேவையை நடைமுறைப்படுத்துதல்.

இறக்கம்விவாதம் போட்டி

கட்டுரை போட்டி
விண்ணப்ப
Call for Abstract from universities

Search