செய்திகள் மற்றும் கட்டுரைகள்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இலங்கையில் அமுலாக்குவற்கான முன்முயற்சிகள் ஆரம்பம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அமுலாக்கம் தொடர்பில் ஆராய்வதற்காக ஊடகத்துறை அமைச்சின் குழுவொன்று அடுத்த மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யத்திட்டமிட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம்செய்திருந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் வெங்கடேஷ் விடுத்த அழைப்பையடுத்து இந்திய அனுபவத்தை அறிந்கொள்வதற்காக இந்தவிஜயத்தை முன்னெடுக்கத்திட்டமிட்டுள்ளதாக ஊடககத்துறை அமைச்சின் மேலதீகச் செயலாளர் பீ.கே.எஸ். ரவீந்திர தெரிவித்தார்.

(இந்தியர்களுக்கு அனுபவம் உள்ளது. 2005ம் ஆண்டில் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியிருந்தனர். இந்திய ஆர்வருடனான சந்திப்பின் போது சட்டம் தொடர்பிலும் அதன் பயன்பாடு தொடர்பிலும் நல்ல அறிவை வெளிப்படுத்தியிருந்தார்.எமக்கு அவர்களின் அனுபவமே தேவையாகவுள்ளது.’ எனக்குறிப்பிட மேலதீகச் செயலாளர் அழைப்பின்  பேரில் நான்கு ஐந்து நாட்கள் தங்கியிருந்து அனுபவத்தை பகிர்ந்துகொள்ள எண்ணியுள்ளதாகக் குறிப்பிட்டார். 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அமுலாக்கத்தை உறுதிசெய்வதற்காக நாடெங்கிலும் இருந்து 6000 தகவல் அதிகாரிகளை பயிற்றுவிக்கும் நோக்குடன் ஊடகத்துறை அமைச்சினால் கொழும்பில் 500 சிரேஸ்ட 

அரசு துறைசார் அதிகாரிகளுக்கு தகவலறியும் உரிமைச் சட்டம்தொடர்பாக  அளிக்கப்பட்ட  பயிற்சியின் நடுவே கருத்துவெளியிடும் போதே இந்தத்தகவலை வெளியிட்டார்.

பல்வேறு சவால்களைத் தாண்டி தகவல் அறியும் உரிமைச்  சட்டம் கடந்த ஜுன் மாதத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது முதலாக அது எப்போது நடைமுறைச் சாத்தியமாகும் என்ற அங்கலாப்பு ஆர்வலர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பரவலாகக் காணப்படுகின்றது. 

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கான அங்கத்தவர்களின் பெயர்களை அரசமைப்பு  சபையானது பரிந்துரைத்துள்ள நிலையில் இறுதி அங்கீகாரத்திற்காக ஜனாதிபதியின் உத்தரவிற்காக காத்திருக்கின்றது. 

தகவல் அறியும் உரிமைச்சட்டமானது 2017ம் ஆண்டு பெப்ரவரி 4ம்திகதி முதல் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள

நிலையில்
சட்டத்தின் பலாபலன்களை இலங்கையர்கள் பெற்றுக்கொள்ள ஆரம்பிக்க முடியும் என்று ஊடகத்துறை அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது. 

இதற்கு தயார் செய்தும் வகையிலேயே சப்ரகமுவ இ மேல் மாகாணம் இதென் மாகாணம் இவட மத்திய மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் ஆகியவற்றில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 35 சிரேஷ்ட அதிகாரிகள் தம்தம் பகுதிகளைச் சேர்ந்த தகவல் அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கான பயிற்சிகள் இதன் போது வழங்கப்பட்டன. 

‘நாட்டில் தகவல் உரிமைச் சட்டத்தை முறையாக அமுல்படுத்துவதற்கும் அதன் பலாபலனை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவுமஒவ்வொரு அரசாங்க நிறுவனத்தில் இருந்து தலா ஒவ்வொரு அதிகாரிகளை தகவல் அதிகாரிகளாக பயிற்றுவிக்கவுள்ளோம்இ’ எனக் குறிப்பிட்ட அவர் ‘ இலங்கையிலுள்ள அரசாங்க அதிகாரிகள் தகவல்களை வழங்காதிருக்கின்ற கலாசாரம் காணப்படுகின்ற நிலையில் தகவல்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கின்ற மனநிலை மாற்றத்தை ஏற்படுத்த எண்ணியுள்ளோம்’ என பயிற்சி குறித்து குறிப்பிட்டார். 

Source : rtiwire.com

RTI நிகழ்வுகள்

தி செ பு வி வெ ஞா
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31

Latest News

Search