செய்திகள் மற்றும் கட்டுரைகள்

ஆன்லைன் மூலம் தகவல் அறியும் உரிமை சட்ட மனு தாக்கல் செய்யலாம்

தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான மனுக்களை ஆன்லைன் மூலம் அனைத்து மத்திய அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களிலும் பதிவு செய்யும் சேவையை மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி டில்லியில் துவக்கி வைக்கிறார். அரசின் வெளிப்படை தன்மையை தெரிவிப்பதற்காக இந்த ஆன்லைன் மூலம் மனு தாக்கல் செய்யும் சேவையை துவங்க இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

சேவை விரிவாக்கம் :
தொழிலாளர் மற்றும் பயிற்சி துறையுடன் தொடர்புடைய துறைகளில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் பெறுவதற்கு கட்டுப்பாடுகள் இதுவரை இருந்து வந்தது. இந்த கட்டுப்பாட்டை தளர்த்தி மேலும் 37 மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 21ம் தேதி முதல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் அறியும் வசதி அனைத்து மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளதாக தொழிலாளர் மற்றும் பயிற்சி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் சேவை :
2005ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்தது. இசசட்டத்தின்படி எந்த ஒரு குடிமகன் பெற விரும்பும் தகவலுக்கு 30 நாட்களுக்குள் அரசு பதிலளிக்க வேண்டும். இந்த சட்டத்தின் மூலம் தகவல் பெற ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்லைன் மூலம் தகவல் பெறும் சேவையில் ரூ.10 இன்டர்நெட் பேங்கிங் மூலம் எஸ்.பி.ஐ., மற்றும் அது சார்ந்த வங்கிகள் மூலம் செலுத்தி, இந்த ஆன்லைன் சேவையை பயன்படுத்தலாம். கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகளையும் இதற்காக பயன்படுத்தலாம். www.rtionline.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அதில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில், மனுவை பதிவேற்றம் செய்யலாம். அந்த மனு 500 வார்த்தைகள் கொண்டதாக இருக்க வேண்டும். 500 வார்த்தைகளுக்கு மேல் உள்ளதாக இருந்தால் அதனை கூடுதல் இணைப்பாக இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பதிவு செய்யப்பட்ட மனு குறிப்பிட்ட துறைக்கு அனுப்பப்பட்ட உடன் மனுதாரரின் மொபைல் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும்.

கட்டுப்படும் துறைகள் :
தகவல் பெற விரும்புபவர் 011-24622461 என்ற தொலைப்பேசி அழைப்பு மூலம் சம்பந்தப்ப‌ட்ட துறை மூலம் தகவல் பெறலாம். ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி அலுவலகம், உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், யூ.பி.எஸ்.சி., உள்ளிட்ட 37 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தொடர்பான தகவல்களை இந்த ஆன்லைன் தகவல் அறியும் உரிமைச்சட்ட மனுக்கள் மூலம் பெறலாம். ஆன்லைன் மூலம் மனுக்கள் பெறப்படும் இந்த தொழில்நுட்ப சேவை மக்களுக்கு பயன் தரும் மிகப் பெரிய முன்னேற்றகரமான சாதனை என காமன்வெல்த் மனித உரிமைகள் சேவை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் நாயக் தெரிவித்துள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=785824

Source : info.mudukulathur.com

RTI நிகழ்வுகள்

தி செ பு வி வெ ஞா
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30

Latest News

Search