செய்திகள் மற்றும் கட்டுரைகள்

தகவல் பெறும் உரிமை

1. எப்பொழுது இது அமலுக்கு வருகிறது?

அக்டோபர் 12, 2005-ல் அமுலுக்கு வந்தது. (திட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து (ஜீன் 15, 2005) 120-வது நாளில்), சில விதிகள் உடனடியாகச் செயல்படுத்தும் வகையில் அமலுக்கு வந்தன. அவையாவன, அரசு அதிகாரியின் கடமைகள், மக்கள் தவவல் தொடர்பு அதிகாரி, உதவி மக்கள் தகவல் தொடர்பு அதிகாரியின் பெயர்கள், மத்திய மற்றும் மாநில தகவல் கமிஷன் அமைத்தல், சட்டம் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இவை பொருந்தாமை, மற்றும் இந்தச் சட்டப் பிரிவுகளை அமலாக்குவதற்காக விதிமுறைகளை இயற்றும் அதிகாரத்தை வழங்குதல்

2. யாரெல்லாம் இதில் அடக்கம்?

ஜம்மு மற்றும் காஷ்மீரைத் தவிர இந்தச் சட்டம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.

3. தகவல் என்றால் என்ன அர்த்தம்?

தகவல் என்பது எந்தப் பொருள் அல்லது தகவல் எந்த வடிவில் இருந்தாலும் அதாவது, பதிவுப் பத்திரங்கள், ஆவணங்கள், குறிப்புகள், மின்னஞ்சல்கள், கருத்துக்கள், ஆலோசனைகள், செய்தி வெளியீடுகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், பதிவேடுகள், ஒப்பந்தங்கள், புகார்கள், பேப்பர்கள், மாதிரிகள், முன்மாதிரிகள், மற்றும், பொது அதிகாரி தற்போதைக்கு அமலில் இருக்கும் எந்தச் சட்டத்தின் அடிப்படையிலும் பார்க்கக்கூடிய தனியார் சம்மந்தப்பட்ட தகவல் விவரங்கள் (மின் வடிவம் உட்பட). ஆனால் இதற்கு “கோப்பு குறிப்புகள்” உட்பட்டதல்ல.

4. தகவல் பெரும் உரிமை என்றால் என்ன?

அதில் கீழ்கண்ட உரிமைகள் அடங்கும்.

1. வேலைகள், ஆவணங்கள், ரெக்கார்டுகளைச் சோதனையிடுதல்.

2. ஆவணங்களில் இருந்து குறிப்புகள் எடுத்துக்கொள்வது, உண்மையென உறுதியளிக்கப்பட்ட பிரதிகள் அல்லது நகல்களைப் பெறுவது.

3. சான்றளிக்கப்பட்ட பொருட்களின் மாதிரிகள் எடுப்பது.

4. பிரிண்ட் அவுட், பிளாப்பிகள், டேப்ஸ், வீடியோ கேசட் வடிவில் தகவல் கிடைப்பது அல்லது இதர மின் முறைகள் மூலம் தகவல் பெறுவது.

அதிகாரிகள் மற்றும் அவர்களின் கடமைகள்1. அரசு அதிகாரிகளின் கடமைகள் என்னென்ன?

சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து 120 நாட்களுக்குள் கீழ்கண்ட விபரங்கள் வெளியிடப்பட வேண்டும்.

அதனுடைய அமைப்புச் செயல்பாடுகள் மற்றும் கடமைகள் பற்றிய விவரங்கள்

அதனுடைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் அதிகாரம் மற்றும் கடமைகள்

தீர்மானம் எடுக்கப்படும் செயல்முறைகளில் பின்பற்றப்படும் நடைமுறை, மேற்பார்வை செய்வதன் வழிமுறைகள் மற்றும் கடமைப் பொறுப்பு உட்பட

பணிகளைச் செய்திட, அமைத்திட்ட விதிமுறைகள்

அதனுடைய பணியாளர்கள் பணிகளைச் செய்திடப் பயன்படுத்தும் விதிகள், ஒழுங்குமுறைகள், நெறிமுறைகள், கையேடுகள், பதிவுகள்

அது கொண்டிருக்கும் அல்லது அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆவணங்களின் இனங்களைக் கொண்ட அறிக்கை ஒன்று

திட்டத்தை உருவாக்குவது சம்மந்தமாக அல்லது அதனுடைய அமலாக்கம் சம்மந்தமான, ஆலோசனைக்காக இருக்கக்கூடிய உறுப்பினர்கள் அல்லது பிரதிநிதித்துவங்கள் பற்றிய விவரங்கள்

இதனால் உருவாக்கப்பட்ட வாரியங்கள், மன்றங்கள், குழுக்கள் மற்றும் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட பிற குழுக்களின் அறிக்கைகள். கூடுதலாக, அதனுடைய ஆலோசனைக் கூட்டங்கள் பற்றிய தகவல்கள் பொதுமக்கள் அணுகுக்கூடியதா என்பது பற்றிய தகவல்

அதனுடைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பெயர், முகவரி அடங்கிய புத்தகம்

அதனுடைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாங்கும் மாதச் சம்பளம், அதனுடைய வரையறை செய்யப்பட்ட விதிகளில் தரப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை முறை உட்பட

அதனுடைய ஒவ்வொரு நிறுவனத்திற்கும் (ஏஜென்சி) ஒதுக்கப்படும் பட்ஜெட், அனைத்துத் திட்டங்களைப் பற்றிய விவரங்கள், முன்மொழியப்பட்ட செலவுத்தொகை மற்றும் பணப் பட்டுவாடா செய்யப்பட்டது பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்

மான்யம் வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்தும் முறை, தொகை ஒதுக்கீடு விபரம், மற்றும் அத்தகைய திட்டத்தால் பயன் அடைபவர்கள் பற்றிய விபரம்

அதனால் வழங்கப்பட்ட சலுகைகள், அனுமதி அல்லது உரிமையை பெற்றுக் கொண்டவர்களைப் பற்றிய விபரங்கள்

தகவல் கிடைப்பது பற்றிய விபரங்கள் அல்லது அது கொண்டிருக்கும் தகவல் (மின்வடிவத்தில் சுருக்கப்பட்டவை)

தகவல்கள் பெறுவதில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்த விபரங்கள்

மக்கள் தொடர்பு அதிகாரிகளின் பெயர் மற்றும் இதர விவரங்கள்

2. அரசு அதிகாரி என்றால் என்ன அர்த்தம்?

இதன் அர்த்தம், கீழ்கண்டவற்றால் தொடங்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட சுயாட்சி செய்யக்கூடிய அதிகாரி அல்லது குழு அல்லது நிறுவனம்

சட்டத்தின் அடிப்படையில்

பாராளுமன்றம் உருவாக்கிய பிற சட்டம்

மாநில சட்டசபையில் உருவாக்கப்பட்ட பிற சட்டத்தின்படி

கொடுக்கப்பட்ட அறிவிப்பினால் அல்லது சம்பந்தப்பட்ட அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட உத்தரவு மற்றும்

ஒரு அமைப்பிற்குச் சொந்தமான, அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள அல்லது அமைப்பால் நிதிஉதவி செய்யப்படுகிற நிறுவனங்கள்

நேரடியாக அல்லது மறைமுகமாக சம்பந்தப்பட்ட அரசாங்கத்தால் நிதிஉதவி பெறுகின்றன அரசு சாரா அமைப்புகள்

3. மக்கள் தகவல் தொடர்பு அதிகாரிகள் என்பவர்கள் யார்?

மக்கள் தகவல் தொடர்பு அதிகாரிகள், அரசு அதிகாரிகளால் அனைத்து நிர்வாக அமைப்பிலும் அல்லது அலுவலகங்களிலும் தகவல் சட்டத்தின் அடிப்படையில் தகவல் கேட்கும் குடிமக்களுக்குத் தகவல் கொடுப்பதற்காக நியமிக்கப்படடவர்கள்.

4. மக்கள் தகவல் தொடர்பு அதிகாரியின் கடமைகள் என்ன?

தகவல் பெறுவது குறித்து ஒரு நபரிடமிருந்து வரும் வேண்டுகோளை மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி கவனித்தல்; ஆனால் அந்த வேண்டுகோள் எழுத்துவடிவில் கொடுக்ப்பட்டதாய் இல்லாமல் இருந்தால், அந்த நபருக்கு அதே விஷயத்தை எழுத்து வடிவில் தருவதற்குத் தேவையான உதவியைத் செய்வது

தகவல் கோரப்பட்டது அல்லது அதனுடைய பொருள் மற்றொரு அரசு அதிகாரியின் வேலையோடு சம்மந்தப்பட்டிருந்தால், மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி அந்த கோரிக்கையை 5 நாட்களுக்குள் அந்த அரசு அதிகாரியிடம் தகவல் தெரிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கலாம். விண்ணப்பதாரருக்கு இது பற்றி உடனடியாகத் தெரிவித்து விட வேண்டும்.

மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி தனது பணியை பிறரிடத்தில் ஒப்படைப்பதற்குப் பிற அதிகாரிகளின் உதவியை நாடலாம்

மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி, பெறப்பட்ட வேண்டுகோளின் மீது இயன்றவரையில் எவ்வளவு விரைவாக முடியுமோ அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம். எவ்வாறாயினும் வேண்டுகோள் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் வரையறுக்கப்பட்ட கட்டணம் செலுத்திய நபருக்கு வேண்டிய தகவலை அளித்தல் வேண்டும். அல்லது, பிரிவு 8, 9இல் குறிப்பிடடுள்ள காரணங்களால் வேண்டுகோளை நிராகரிக்கலாம்.

ஒரு நபரின் வாழ்க்கை அல்லது சுதந்திரம் சம்மந்தப்பட்ட தகவல் பற்றி வேண்டுகோள் விடுத்தால், வேண்டுகோள் விடுவிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் தகவல் தரப்பட வேண்டும்.

வேண்டுகோளின் மீது, மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி வரையறுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் முடிவெடுக்கத் தவறிவிட்டால், அந்த வேண்டுகோளை அவர் நிராகரிதுள்ளார் என்று எடுத்துக் கொள்ளலாம்.

வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டால், மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி வேண்டுகோள் விடுத்தவரிடம் கீழ்கண்ட தகவல்களை கொடுத்தல் வேண்டும்.

1. நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள்

2. அத்தகைய நிராகரிப்பிற்கு எதிரான முறையீடு எந்தக் காலகட்டத்திற்குள் இருந்தால் நல்லது என்பது பற்றித் தெரிவித்தல்

3. அப்பல்லேட் அதிகாரி பற்றிய விபரங்கள்

பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்காமலும், தகவல் தரும் அதிகாரியின் தகவல் ஆதாரத்துக்கு ஊறு விளைவிக்காமலும் இருக்கும் பட்சத்தில் தகவல் தொடர்பு அதிகாரி எந்த வகையில் தகவல் கோரப்படுகிறதோ அந்த வகையில் தகவல் தருவார்.

ஒரு பகுதி, தகவல் பெற்றுக் கொள்ள அனுமதித்தால், மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி, அதைத் தெரிவிக்கும் நோட்டீஸை கொடுக்க வேண்டும்.

ரெக்கார்டின் ஒரு பகுதி மட்டும் கேட்கப்பட்டிருந்ததால், ரெக்கார்டை பிரித்து ஆராய்ந்த பின், இருக்கும் தகவல்கள் வெளிப்படுத்துவதற்கு விதிவிலக்குப் பெறாத தகவல்கள் அளிக்கலாம்.

உண்மை குறித்த விசாரணையில், கண்டுபிடிக்கப்பட்டு அவ்வாறான கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு. அந்த முடிவுக்கான காரணங்கள்.

முடிவெடுத்தவருடைய பெயர் மற்றும் பதவி

கட்டணம் கணக்கிடப்பட்டது பற்றிய விபரங்கள், விண்ணப்பதாரர் எவ்வளவு கட்டணம் டெபாசிட்டாக வைக்க வேண்டும் என்பது பற்றி.

அவர் அல்லது அவரின் தகவல் வெளிப்படுத்த இயலாத பகுதிகளைப் பற்றிய மறுஆய்வு செய்வதற்கான உரிமை, விதிக்கப்பட்ட கட்டணத்தொகை பற்றி

ஒரு வேளை எதிர்பார்க்கப்பட்ட தகவல் மூன்றாவது பார்ட்டியால் கொடுக்கப்பட்டால் அல்லது இவை ரகசியமானதால் மூன்றாவது நபர் கருத வேண்டும். மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி எழுத்துபூர்வமான அறிவிப்பை மூன்றாவது நபருக்குக் கொடுக்கலாம். வேண்டுகோளைப் பெற்றுக்கொண்ட 5 நாட்களுக்குள் அதனுடைய பிரிதியிடம் பேசுவது கருத்தில் கொள்ளப்படும்.

மூன்றாவது நபருக்கு, மக்கள் தொடர்பு அதிகாரியின் முன்வந்து விளக்குவதற்கு அத்தகைய நோட்டீஸ் பெற்றுக்கொண்ட 10 நாட்களுக்குள் கண்டிப்பாக வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.

என்ன தகவல்கள் கிடைக்கும்?

1. எவை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாதவை.

பின்வருவன வெளிப்படையாகத் தெரிவிப்பதிலிருந்து விதிவிலக்கு பெற்றவை

1. வெளியிடப்படும் தகவல், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் ஊறு விளைவித்தால் மற்றும் பாதுகாப்பு, வியூகம், மாநிலத்தினுடைய அறிவியல் பொருளாதார நலன், அந்நிய மாநிலத்தோடு உறவு வைத்துக்கொள்ளத் தூண்டும் வகையிலான தகவல்.

2. வெளிப்படையாக அனுமதிக்கப்படாத தகவல்களை வெளியிடுதல். அதாவது, நீதிமன்றச் சட்டம் அல்லது ட்ரிப்யூனல் அல்லது வெளிப்படுத்தப்படும் தகவல் நீதிமன்ற அவமதிப்பாக இருந்தால்

3. வெளியிடப்படும் தகவல் நாடாளுமன்றம் அல்லது மாநில வட்டசபையின் உரிமையை பாதிக்கும் விதமாக இருந்தால்

4. வியாபார நம்பிக்கை, வர்த்தக ரகசிய அல்லது அறிவுகள் சொத்துக்கள் தகவல் உட்பட; இத்தகவல்கள் வெளிப்படுத்தப்படுவது, மூன்றாவது நபரின்போட்டியிடுகிற நிலைக்கு ஊறுவிளைவிப்பதாக இருந்தால். சம்மந்தப்பட்ட அதிகாரி, அத்தகைய தகவலை தெரிவிப்பதில் பெரும் மக்களின் தேவை இருப்பதாகத் திருப்தி அடைந்தாலொழிய தகவல் தெரிவிக்கக் கூடாது.

5. தனது பொறுப்பு சார்ந்த உறவால் ஒருவருக்குக் கிடைக்கும் தகவல்களில் அவ்வாறான தகவலை வெளியிடுவது பொது நலனுக்கு பெரிதும் உதவக்கூடியதாக இல்லாத போது சம்மந்தப்பட்ட அதிகாரி அதனை வெளியிடக்கூடாது.

6. அந்நிய அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட ரகசியத் தகவல்கள்.

7. தகவல் வெளியிடுவது, எந்த நபரின் வாழ்க்கையை அல்லது அவரின் பாதுகாப்புக்கு இடர் உண்டாக்குமானால் அல்லது தகவல் பெறும் மூலத்தைக் கண்டறிதல் அல்லது சட்ட அமலாக்கத்திற்காகத் துணைபுரிவதற்காக ரகசிய கொடுக்கப்படுபவை அல்லது பாதுகாப்பு காரணங்கள்.

8. தகவல், விசாரணை நடைமுறையில் முட்டுக் கட்டையை ஏற்படுத்தினால் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் வழக்குத் தொடர்வதால்.

9. கேபினட் பேப்பர்கள், அமைச்சரவையின் கலந்தாய்வுப் பதிவுகள் மற்றும் செயலர் மற்றும் பிற அதிகாரிகள்.

10. தகவல்; தனிப்பட்ட தகவல்களோடு தொடர்புடையாக இருந்தால், அதை வெளிப்படுத்துவதால்; பொது நலத்தோடு அல்லது ஆர்வத்தோடு எந்தவிதச் சம்பந்தமும் இருக்கக் கூடியது அல்லது ஏடு தனிப்பட்ட நபரின் சுதந்திரத்தை வரம்புமீறி கெடுப்பதாக இருந்தால்.

11. மேற்கண்ட பட்டியலில் விதிவிலக்கு பெற்றிருந்தாலும், ஒரு வேளை வெளியிடப் படுவதற்கு பொது மக்களின் தேவை, பாதுகாக்கப்பட்ட ரகசியத்தைவிட இன்றியமையாததாக இருந்தால் அரசு அதிகாரி தகவல் பெற அனுமதிக்கலாம்.

2. பகுதி வெளியிடப்படுவதற்கு அனுமதியுண்டா?

ரெக்கார்டின் அந்தப் பகுதி மட்டும், வெளிடப்படுவதற்கு விதிவிலக்கு பெற்ற தகவல்களைக் கொண்டிராமல் இருந்தால், விதிவிலக்கு பெற்ற செய்திகளைக் கொண்ட எந்தப் பகுதியோடும் சம்மந்தப்படாமல் தனியாக இருந்தால் தகவல்கள் கொடுக்கலாம்.

3. யார் தவிர்க்கப்பட வேண்டியவர்கள்?

இரண்டாவது ஷெட்யூலில் குறிப்பிடப்பட்டுள்ள மத்தியப் புலனாய்வு, மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள், மத்திய புலனாய்வு அமைப்பு (RAW), வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம், மத்திய பொருளாதாரப் புலனாய்வு இயக்குநரகம், நார்கோட்டிடிக்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, வான்வழி ஆய்வு மையம், சிறப்பு எல்லைப்படை, எல்லைப் பாதுகாப்புப்படை, மத்திய ரிசர்வ் போலீஸ், குற்றவியல் பிரிவு சி.ஐ.டி.சி.பி, தாத்ரா மற்றும் நாகார் ஹவிலி, மற்றும் சிறப்புப் பிரிவு, லக்ஷ்த்தீவு போலிஸ் போன்ற நிறுவனங்கள் விலக்கப்பட வேண்டியவை. இவ்வகையில் விலக்கப்படுவது முற்றிலுமாகக் கிடையாது. ஊழல் குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல் பிரச்சினை எழுந்தால் இத்தகைய அமைப்புகளுக்குத் தகவல் தர வேண்டியிருக்கும். மனித உரிமை மீறல் சம்மந்தமான மேலும் பிற தகவல்கள் மத்திய அல்லது மாநில தகவல் கமிஷனின் அனுமதிக்குப் பின்னரே தரப்படும்.

1. தகவல் வேண்டுவதற்கான செயல்முறை

1. தகவல் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன?

கையால் எழுதியோ அல்லது மின்னச்சு மூலமாக ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தி அல்லது அந்தப் பகுதியின் அதிகாரபூர்வ மொழியை; எந்த மாதிரியாகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதைக் குறிப்பிட்டு, மக்கள் தகவல் தொடர்பு அதிகாரிக்கு எழுதலாம்.

2. என்ன காரணத்திற்காகத் தகவல் கோரப்படுகிறது என்பதைப் பற்றிக் குறிப்பிடத் தேவையில்லை.

3. அவர்கள் வரையறுத்துள்ளபடி கட்டணம் செலுத்த வேண்டும் (வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்களுக்கு இது உரியதல்ல)

2. தகவல் பெறுவதற்கான கால வரையறை என்ன?

1. விண்ணப்பத்திலிருந்து 30 நாட்கள்

2. ஒரு நபரின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் சம்மந்தமான தகவலாக இருந்தால் விண்ணப்பித்த 48 மணி நேரத்திற்குள் தரப்பட வேண்டும்.

3. ஒரு வேளை, தகவலுக்கான விண்ணப்பம், உதவி மக்கள் தகவல் அதிகாரியிடம் கொடுக்கப்பட்டிருந்தால், முன்குறிப்பிட்ட தேதியிலிருந்து 5 நாட்கள் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

4. மூன்றாவது நபரின் தலையீடு இருக்குமானால் கால வரையறை 40 நாட்கள்.

5. குறிப்பிட்ட கால வரையறைக்குள் தகவல் தரத் தவறினால் நிராகரிக்கப்பட்டுவிட்டதாகக் கருதிக்கொள்ளலாம்.

3. கட்டணம் என்ன?

1. வரையறுக்கப்படும் கட்டணம் நியாயமானதாக இருக்க வேண்டும்.

2. மேலும் கட்டணம் தேவைப்பட்டால், சம்மந்தப்பட்டவருக்கு, கட்டணம் குறித்த கணக்கிடப்பட்ட விவரங்களை எழுத்தின் மூலம் தெரிவிக்க வேண்டும்.

3. மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி விதித்த கட்டணத்தை, மேல்முறையீடுகளைக் கவனிக்கும் அதிகாரிக்கு விண்ணப்பிப்பதின் மூலம் மறு ஆய்வுசெய்யலாம்.

4. வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிக்கும் மக்களிடம் எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது.

5. ஒரு வேளை மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி குறிப்பிட்ட கால வரையறைக்குள் தகவலை தெரிவிக்கத் தவறினால், விண்ணப்பதாரருக்குத் தகவலை இலவசமாகத் தர வேண்டும்.

4. எந்த அடிப்படையில் நிராகரிக்கலாம்.

1. ஒருவேளை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டியதிலிருந்து விதிவிலக்குப் பெற்றிருந்தால்.

2. ஒருவேளை மாநிலத்தைத் தவிர வேறு நபருடைய உரிமையைச் சட்டபப்டி பெறுவதாக இருந்தால்.

RTI நிகழ்வுகள்

தி செ பு வி வெ ஞா
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30

Latest News

Search