தகவலறிவதற்கான உரிமைகள் சட்டம் பற்றிய செயலமர்வுத் தொடரொன்றினை எற்பாடுசெய்ய நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கை
எடுத்துள்ளது. இதற்கிணங்க உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான நிகழ்ச்சி 2019-02-15 ஆந் திகதி அமைச்சு கேட்போர்கூடத்தில் நடாத்தப்பட்டது. இந்த செயலமர்வு நிதி மற்றும் வெகுசனஊடக அமைச்சின் பணிப்பாளர் திரு. ஜே.டபிள்யு.எஸ்.கித்சிறி அவர்களால் நடாத்தப்பட்டது.