ஏறக்குறைய 400 பிரசைகளின் பங்கேற்புடன் 2019.03.16 ஆந் திகதி மட்டக்களப்பு சிவகுருநாதன் வித்தியாலயத்தில் இந்த நடமாடும் சேவை மிகவும்
வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இதன்பொருட்டு பிரசைகளுக்கு அழைப்பு விடுத்தல் மற்றும் அவசியமான ஆரம்ப பிரச்சார நடவடிக்கைகள் AFRIEL இளைஞர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டன.
வெகுசன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி ரமணி குணவர்தனவின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாகாணசபையை பிரதிநிதித்துவம்செய்து இதன் பிரதிப் பிரதம செயலாளர் திருமதி. ஜே. முரளீதரனும் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தையும் அம்பாறை மாவட்டச் செயலகத்தையும் பிரதிநிதித்துவம்செய்து மேலதிக மாவட்டச் செயலாளர்களும் வெகுசன ஊடக அமைச்சின் பணிப்பாளர் (ஊடகம்) திரு. கே.ஜயந்தவும் உதவிச் செயலாளர் திருமதி சுதர்மா கருணாரத்னவை உள்ளிட்ட தகவலறிதல் கூறின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
அதைப்போலவே வளப்பங்களிப்புக்காக தகவல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் திரு. பியதிஸ்ஸ ரணசிங்க, சட்டத்தரணி ஜகத்
லியனஆரச்சி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி பிரதீப் வீரசிங்க மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் திரு. ரகுராம் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடக்க வைபவத்தின் பின்னர் பங்கேற்ற பிரசைகளுக்கு தகவலறிதல் உரிமைகள் பற்றிய அடிப்படை புரிந்துணர்வினை பெற்றுக்கொடுத்து அவர்கள் 05 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அதன் பின்னர் ஒவ்வொரு வளப்பகிர்வாளருக்கும் குழுக்கள் வழங்கப்பட்டு அங்கு பிரசைகளுக்கு தமது சிக்கல்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த சிக்கல்களை தீர்த்துவைப்பதற்காக தகவலறிதல் சட்டம் பாவிக்கப்படுகின்ற விதம் பற்றி நாங்கள் விடயங்களை எடுத்துரைத்ததோடு இறுதியில் மேற்படி செயற்பாங்கு பற்றி மேலும் கண்காணித்து இந்த பிரசைகளுக்கு அவசியமான ஒத்துழைப்பினை வழங்க AFRIEL அமைப்பின் அங்கத்தவர்கள் முன்வந்தனர்.
இதன்போது தகவலறிவதற்கான விண்ணப்பத்திரமொன்றை பூர்த்திசெய்கையில் பொது அதிகாரசபை என்றால் என்ன? தகவல் உத்தியோகத்தர் என்றால் என்ன? என்பது பற்றி பிரசைகள் விழிப்புணர்வூட்டப்பட்டனர்.
இந்த குழுக் கலந்துரையாடல்களின்போது காணிகள் பற்றிய சிக்கல்களையே பெரும்பாலான பிரசைகள் முன்வைத்தனர். பெரும்பாலான மீனவர்களுக்கு சுனாமிக்குப் பின்னர் வழங்கப்பட்ட காணிகளுக்காக இன்றளவிலும் சொத்துவம் கிடையாதென்பதோடு முன்னர் இருந்த காணிகள் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக பெருந்தெருக்கள் மற்றும் போக்குவரத்து தொடர்பான சிக்கல்களும் எம்மிடம் முன்வைக்கப்பட்டன. ஒரு கிராமத்தின் வீதி சீரழிந்துள்ளதோடு அதன் காரணமாக லங்கம பேருந்து அந்த கிராமத்திற்கு வருவதை நிறுத்தியுள்ளதாகவும் அறிவித்தார்கள்.
இத்தகைய பல்வேறு சிக்கல்கள் பிரசைகளால் முன்வைக்கப்பட்டதோடு நாங்கள் அவர்களுக்கு பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை போன்ற பொது அதிகாரசபைகளுக்கு தகவலறிதல் விண்ணப்பபத்திரம் சமர்ப்பிக்கப்படவேண்டிய விதம் மற்றும் கோரவேண்டிய தகவல்கள் யாவை என்பது பற்றியும் விளக்கமளித்தோம்.