அதிமேதகு சனாதிபதியவர்களின் எண்ணக்கருவின்படி அமுலாக்கப்படுகின்ற “ரட்ட வெனுவென் எக்கட்ட சிட்டிமு” “நாட்டுக்காக ஒன்றிணைவோம்”
எனும் கருப்பொருளிலான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு நிகழ்வு 2019-05-06 ஆந் திகதி தொடக்கம் 2019-05-11ஆந் திகதி வரை அம்பாறை மாவட்டத்தில் நடைபெறும். இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக வெகுசன ஊடக அமைச்சினால் அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ( கிராம அலுவலர்கள், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்) மற்றும் சமூக அடிப்டையிலான அமைப்புகளின் உத்தியோகத்தர்களுக்கான (மகளிர் சங்கங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மரண உதவிச் சங்கங்கள்) தகவலறிதல் உரிமைகள் சட்டம் சம்பந்தமான ஆறு நிகழ்ச்சிகள் கீழே காட்டப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் 2019-05.08 ஆந் திகதி நடாத்தப்பட்டன.
அம்பாறை பிரதேச செயலாளர் பிரிவு
உகன பிரதேச செயலாளர் பிரிவு
மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவு
பதியதலாவ பிரதேச செயலாளர் பிரிவு
கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவு
கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு
வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர மற்றும் மேலதிக செயலாளர் திருமதி ரமணீ குணவர்தன ஆகியோரின் ஆலோசனையின் பேரிலும் பணிப்பாளர் திரு. ரீ. டபிள்யு. எஸ். கித்சிறியின் மேற்பார்வையின் கீழும் அம்பாறை மாவட்டச் செயலாளர் திரு. டி. எல்.எம். பண்டாரநாயக்கவின் ஏற்பாட்டின் கீழும் இந்த நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்காக வெகுசன ஊடக பணிப்பாளர் திரு. ரீ. டபிள்யு. எஸ். கித்சிறி, சட்டத்தரணி திரு. ஜகத் லியனஆரச்சி , RTI ஆலோசகர் திரு. பெருமாள் பிரதீப் ஆகியோர் வளப் பங்களிப்பு வழங்கினர்.