செய்திகள் மற்றும் கட்டுரைகள்

பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிப்பதற்கான செயலமர்வு

தகவலறிதல் உரிமைகள் சட்டம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதை வசதிப்படுத்துவதற்காக பயிற்றுவிப்பாளர்களை

பயிற்றுவிப்பதற்கான  நிகழ்ச்சித்திட்டமொன்றை 2019.07.04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடாத்த வெகுசன ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது. கௌரவ வெகுசன ஊடக அமைச்சர் றுவன் விஜயவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீரவின் அறிவுறுத்தலின்பேரில் இந்த நிகழ்ச்சித்திட்டம் அமைச்சின் தகவலறிதல் கூறு மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

அதற்கிணங்க இந்த பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிப்பதற்கான   செயலமர்வு  (TOT) வெகுசன ஊடக அமைச்சின் வேண்டுகோளின் பிரகாரம் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (UNDP) அனுசரணையுடன்  தற்போது (2019.07.04, 05,06) நீர்கொழும்பு, ஏத்துக்காலை, போருதொட்ட வீதியில் அமைந்துள்ள ஜெற்விங் பீச் ஹோட்டலில் நடைபெறுகின்றது.

ஆரம்பத் தொடர் 2019.07.04 ஆந் திகதி மாலை 6.00 மணிக்கு தொடங்கியதோடு வரவேற்புரையும் நோக்கங்களை தெளிவுபடுத்துதலும் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி யூ.பீ.எல் டீ. பத்திரணவினால் நிகழ்த்தப்பட்டது. அதன்பின்னர் அமைச்சு செயலாளர் திரு. சுனில் சமரவீர உரை நிகழ்த்தியதோடு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் திருமதி சமிந்திரி சபரமாதுவும் உரை நிகழ்த்திய பின்னர் நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று.

இதன்பொருட்டு ஏற்கெனவே தகவலறிதல் உரிமை பற்றி பயிற்சிபெற்ற ஏறக்குறைய 50 அரச அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிப்பதற்கான நிகழ்ச்சிக்கான வளப்பகிர்வாளர்களாக சட்டத்தரணி ஜகத் லியனஆரச்சி மற்றும் தகவலறிதல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் திரு. பியதிஸ்ஸ ரணசிங்க ஆகியோர் பங்குபற்றினர்.   

இந்த செயலமர்வில் வெகுசன ஊடக அமைச்சின் பணிப்பாளர் திரு. ஜே.டபிள்யூ.எஸ்.  கித்சிறி மற்றும் உதவிச் செயலாளர் திரு. எம்.பீ. பண்டார  உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றதோடு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின்   (UNDP) ஒருங்கிணைப்பாளராக முகாமைத்துவ மற்றும் ஒருங்கிணைப்பு  ஆலோசகர் திருமதி நௌலி விமலரத்ன கலந்துகொண்டார்.

RTI நிகழ்வுகள்

தி செ பு வி வெ ஞா
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30

Latest News

Search