செய்திகள் மற்றும் கட்டுரைகள்

தகவலறிதல் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களை நியமித்தல்

கௌரவ அமைச்சரவர்களின் எண்ணக்கருவுக்கிணங்க பிரசைகளுக்கு தகவலறிதல் சட்டம் பற்றிய விழிப்புணர்வூட்டி விண்ணப்பப் பத்திரங்களையும்

  மேன்முறையீடுகளையும் சமர்ப்பிப்பதற்காக அவசியமான ஒத்துழைப்பினை வழங்குவதற்காக கிராம அலுவலர் பிரிவு மட்டத்தில் தொண்டர் அடிப்படையிலான  தகவலறிதல் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களை (RTI Volunteers) நியமிப்பதற்கான ஏற்புடைய முன்னோடிக் கருத்திட்டம்  கம்பறை மாவட்டத்தை உள்ளடக்கி 2018.07.25 ஆந் திகதி முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது.  இங்கு வரவேற்புரையும் நோக்கங்களை தெளிவுபடுத்தலும் அமைச்சு செயலாளர் திரு. சுனில் சமரவீரவினால் நிகழ்த்தப்பட்டதோடு தகவலறிதல் சட்டத்தின் முக்கியத்துவமும் தேவையும் பற்றி கருத்துரைத்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் வெகுசன ஊடக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சருமான கௌரவ றுவன் விஜேவர்தன அவர்கள் வருகைதந்து  உரை நிகழ்த்தினார்.

இதன்பொருட்டு வெகுசன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி ரமணீ குணவர்தன, தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர்நாயகம் திரு. நாலக்க களுவெவ, வெகுசன ஊடக அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) . திரு.டபிள்யு. எஸ். கித்சிறி, உதவிச் செயலாளர் திரு. எம்.பீ. பண்டார உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பங்கேற்றதோடு  இந்நிகழ்ச்சிக்கான வளப்பகிர்வாளர்களாக சட்டத்தரணி திரு. ஜகத் லியனஆரச்சி, திரு. வருண தீப் ராஜபக்ஷ மற்றும் திரு.  ஷான் விஜேதுங்க ஆகியோர் பங்குபற்றினர்.  எதிர்காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இந்நிகழ்ச்சித்திட்டம் அமுலாக்கப்பட எதிர்பார்க்கப்படுகின்றது.  இந்த தொண்டர் தகவல் உத்தியோகத்தர்களை பயிற்றுவித்தல் தொடர்பான நடவடிக்கைகள் அமைச்சின் தகவலறிதல் உரிமைகள் பற்றிய கூறு மூலமாக இணைப்பாக்கம் செய்யப்படவும் முன்மொழியப்பட்டுள்ளது.

RTI Volunteers 2

RTI Volunteers 3

RTI Volunteers 4

RTI Volunteers 5

RTI Volunteers 6

RTI Volunteers 7

RTI நிகழ்வுகள்

தி செ பு வி வெ ஞா
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30

Latest News

Search