அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவின்படி அமுலாக்கப்படுகின்ற “நாட்டுக்காக ஒன்று சேர்வோம்”
நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக நடாத்தப்படுகின்ற ஒரு நிகழ்ச்சியாக யாழ் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கத்தக்கதாக வலிகாமம் மேற்கு சங்கானை, வலிகாமம் கிழக்கு கோப்பாய், வலிகாமம் தெற்கு உடுவில், வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை, வலிகாமம் தென்மேற்கு சண்டிலிப்பாய், வடமராட்சி பருத்தித்துறை, வடமராட்சி தென்மேற்கு கரவெட்டி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தகவலறிதல் உரிமை பற்றிய சட்டம் சம்பந்தமான ஏழு நிகழ்ச்சிகள் 2019-08-23,24,25,28,29 ஆகிய தினங்களில் வெகுசன ஊடக அமைச்சினால் நடாத்தப்பட்டது.
கௌரவ வெகுசன ஊடக அமைச்சர் றுவன் விஜேவர்தன அவர்களின் வழிகாட்டலின்கீழ் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர மற்றும் மேலதிக செயலாளர் திருமதி. யூ.பீ.எல். டீ. பத்திரணவின் ஆலோசனையின்பேரில் தகவலறிதல் கூறு மூலமாக நடாத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிகளில் தகவலறிதல் உரிமைகள் சட்டம் பற்றி யாழ் மாவட்ட சமூக அடிப்படை அமைப்புகளின் உத்தியோகத்தர்கள் (மகளிர் சங்கங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மரண உதவிச் சங்கங்கள்) விழிப்புணர்வூட்டப்பட்டனர்.
வெகுசன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. யூ.பீ.எல். டீ. பத்திரணவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளுக்கான வளப்பகிர்வாளர்களாக யாழ் பல்கலைக் கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி எஸ். ரகுராம், சுகாதாரத் திணைக்களத்தின் வட மாகாண பிரதிப் பணிப்பாளர் (நிருவாகம்) கொன்ஸ்ரன்ரைன் ஜெக்சீல், உள்ளுராட்சி ஒன்றியத்தின் தகவலறிதல் சட்டம் பற்றிய ஆலோசகர் திரு. பிரதீப் பெருமாள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.