தகவலறிவதற்கான சர்வதேச தினத்திற்கு இணையாக (2019 செத்தெம்பர் 28) வெகுசன ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட தகவலறிவதற்கான சர்வதேச தினக் கொண்டாட்ட விழா கடந்த 15 ஆந் திகதி அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடாத்தப்பட்டது.
அதன்போது தகவலறிதல் உரிமை சம்பந்தமாக USAID நிறுவனம் மற்றும் சேர்வே லங்கா நிறுவனம் கூட்டாக நடாத்திய நாடளாவிய மதிப்பாய்வின் தகவல்களை வெளியிடுதல், தகவலறிதல் சட்டத்தை பொதுநன்மைக்காக பாவித்த பிரசைகளுக்காக ‘பிரசைகள் அபிமான பாராட்டு விருது வழங்கல்’ மற்றும் ‘பவத’ செய்தித்தாளின் சிறப்பு இதழ் வெளியீட்டினை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன.
இந்த வைபத்தில் அமைச்சு செயலாளர் திரு. சுனில் சமரவீர, அரசாங்க தகவல் பணிப்பாளர் தலைமை அதிபதி திரு. நாலக கழுவெவ, வெகுசன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி ரமணி குணவர்தன, மேலதிக செயலாளர் திருமதி. யூ.பீ.எல்.டீ. பத்திரண, மேலதிக செயலாளர் திரு. எஸ்.ஆர்.டபிள்யு.எம். ஆர். பீ. சத்குமார, பணிப்பாளர் திரு. ஜே. டபிள்யு .எஸ் கித்சிறி, உதவிச் செயலாளர் திரு. எம்.பீ.பண்டார உள்ளிட்ட அரச அலுவலர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.