தகவலறிவதற்கான சர்வதேச தின வைபத்தின்போது தகவலறிதல் சட்டத்தை பொது நோக்கத்திற்காக பாவித்து இலங்கைச் சமூக முன்னேற்றத்திற்காக செயலாற்றிய பத்து பிரசைகள் விருது வழங்கி பாராட்டப்பட்டனர்.
இதன்போது 8 விருதுகள் விண்ணப்பங்கள் கோரல் மூலமாக வழங்கப்பட்டதோடு 2 சிறப்பு விருதுகள் நடுவர் குழாத்தினால் பெயர்குறிக்கப்பட்டு வழங்கப்பட்டன.
விண்ணப்பப் பத்திரங்கள் மத்தியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விருதுபெறுனர்கள்
- திரு. ராஹுல் சமந்த ஹெட்டிஆரச்சி
- திரு. கிறேஷன் புத்திக விஜேசிங்க
- திரு. கே. பிரசன்ன
- திரு. கே. பீ. டபிள்யு. சரத் சந்திரசேன
- சமூக படைப்பாளிகள் (பொலநறுவை கிளை சார்பாக) – திருமதி. நிஷாந்தி நடராஜா
- சமூக படைப்பாளிகள் (அம்பாறை கிளை சார்பாக) – திருமதி யசவதீ வாசல
- மாவட்ட சமுதாய அபிவிருத்தி ஒன்றியம்
- திரு. பெசில் கலபுகே
நடுவர் குழாத்தினால் பெயர்குறிக்கப்பட்ட விருதுபெறுனர்கள்
- திரு. தரிந்து ஜயவர்தன
- திரு. திலீபன் அமுதன்