செய்திகள் மற்றும் கட்டுரைகள்

2016 இன் 12 ஆம் இலக்கமுடைய தகவலறிதல் உரிமைகள் பற்றிய சட்டம் சம்பந்தமாக மேற்கொண்ட 3 கருத்திட்டங்களை வெளியிடுதல்

2016 இன் 12 ஆம் இலக்கமுடைய தகவலறிதல் உரிமைகள் பற்றிய சட்டம் சம்பந்தமாக மேற்கொண்ட 3 கருத்திட்டங்களை வெளியிடுதல்  அண்மையில் அதாவது 2019.11.11 ஆந் திகதி அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர அவர்களின் தலைமையிலும் பெருந்தொகையான அரசாங்க அலுவலர்களின் பங்கேற்புடனும் இடம்பெற்றது.

இதன்போது,

  • நடப்புத் தகவல்களை வெளியிடுதல், மேம்படுத்துதலை நோக்கமாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய வெப்தளத்தை வெளியிடுதல்,
  • தகவலறிதல் சட்டத்துடன் தொடர்புடைய விண்ணப்பப் பத்திரங்களை இலத்திரனியல் முறையில் அனுப்பிவைத்தல் மற்றும் மேற்பார்வை செய்வதற்கான முறைமையொன்றை உருவாக்கி வெளியிடுதல்,
  • தகவலறிதல் சட்டம் சம்பந்தமான வழிகாட்டிக்கோவையை வெளியிடுதல்,

போன்றவை இடம்பெற்றன.

நடப்புத் தகவல்களை தொழில்நுட்ப மற்றும் இலத்திரனியல் முறையியலின்படி முன்வைத்தல்

நடப்புத் தகவல்களை வெளியிடுதல், மேம்படுத்துதலை நோக்கமாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய இரண்டு  வெப்தளங்கள் இதன்போது வெளியிடப்பட்டன. அவை தொழிற்பயிற்சி அதிகாரசபையினதும் கமநல சேவைகள் திணைக்களத்தினதும் வெப்தளங்களாகும். இந்த வெப் தளங்களின் உருவாக்கத்திற்காக  ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் நிதிசார் பங்களிப்பு உரித்தாயிற்று.

தகவலறிதல் சட்டதுடன் தொடர்புடைய விண்ணப்பப் பத்திரங்களை இலத்திரனியல் முறையில் அனுப்பிவைத்தல் மற்றும் மேற்பார்வை செய்வதற்கான முறைமையொன்றை உருவாக்குதல்

2016 இன் 12 ஆம் இலக்கமுடைய தகவலறிதல் உரிமைகள் பற்றிய சட்டத்தை முனைப்பாக அமுலாக்கும்பொருட்டு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகவல்களை கோருதலை இலத்திரனியல் வழிமுறைக்கிணங்க அனுப்பிவைப்பதற்கான  முறைமையொன்று வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் திரு. சுனில்  சமரவீர அவர்களின் வழிகாட்டலின்பேரில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் நிதிசார் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது. இந்த முறைமையை முன்னோடிக் கருத்திட்டத்திற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவுசெய்துள்ளதோடு  அந்த முறைமையும் அதேதினத்தன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

வழிகாட்டிக் கோவை

தகவலறிதலுக்கான உரிமை பற்றிய சட்டம் சம்பந்தமாக தகவல் அலுவலர்கள் மற்றும் சட்டம் தொடர்பில் ஆர்வம்காட்டுகின்ற பிரசைகளுக்கு அவசியமான அறிவு மற்றும் வழிகாட்டலை வழங்குவதற்காக  வழிகாட்டிக்கோவையொன்று இதன்போது வெளியிடப்பட்டது. இந்த வழிகாட்டிக்கோவை வெகுசன ஊடக அமைச்சு மற்றும்  ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் கூட்டாக தயாரிக்கப்பட்டது. இதன் மூலமாக தகவல் அலுவலர்களுக்கும்  சட்டம் தொடர்பில் ஆர்வம்காட்டுகின்ற பிரசைகளுக்கும் அவசியமான வழிகாட்டல்களை மிகவும் தெளிவாகவும் முறைமைசார்ந்த வகையிலும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

03 Tracking System05 Tracking System06 Tracking System07 Tracking System08 Tracking System09 Tracking System10 Tracking System

11 Tracking System13 Tracking System16 Tracking System17 Tracking System

RTI நிகழ்வுகள்

தி செ பு வி வெ ஞா
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31

Latest News

Search