கிராமத்திற்கு தகவல் உரிமை நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டத் தொடரின் வடமத்திய மாகாண நிகழ்ச்சித்திட்டம் கடந்த 2019.11.29ஆம் திகதி அனுராதபுரம் CTC விழா மண்டபத்தில் நடைபெற்றது. வெகுசன ஊடகத்துறை அமைச்சு மற்றும் AFRIEL இளைஞர் அமைப்பு என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக இம்மாகாணத்தைச் சார்ந்த சுமார் 400 பேருக்கு நன்மைகள் கிடைத்தன.
கிராமத்திற்கு தகவல் உரிமை நடமாடும் சேவையின் மூலமாக தகவல் சட்டம் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தல் மற்றும் அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆலோசனை வழங்கல் என்பன இடம்பெற்றன. அத்துடன் தகவல் கோரும் படிவம் பூரணப்படுத்துதல் மற்றும் பொது நிறுவனங்களை உறுதியாக அடையாளம் காண்பது தொடர்பில் பிரசைகளுக்கு வழிகாட்டல் வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு அனுராதபுரம் மாவட்ட மேலதிக செயலாளர் ஜீ.டீ.கீர்த்தி கமகே, சட்டத்தரணி ஜகத் லியனஆரச்சி, தகவல் சட்டம் தொடர்பிலான ஆலோசகர் நாலக்க குணவர்தன, வெகுசன ஊடகத்துறை அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் லக்ஸான் த சொய்ஸா ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.